Wednesday, September 13, 2017

3 கோரிக்­கை­களை முன்வைத்து 2 நாள் வேலை நிறுத்தம்

இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் மூன்று கோரிக்­கை­களை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இன்று (புதன்கிழமை) நண்­பகல் 12மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.
மூன்று கோரிக்கைகள்;
01. நுகர்­வோரின் மின் கட்­டண பட்­டி­யலை சரிப்­ப­டுத்­த ­வேண்டும்.
02. கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­ப­டாமல் இருக்கும் ஊழியர் சேம­லாப நிதி­யத்தில் 2ஆயிரம் மில்­லியன் ரூபாய் வைப்­பி­லி­ட­வேண்டும்.
03. சம்­பள முரண்­பா­டு­களை தீர்க்­க­வேண்டும்
என்ற மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

No comments:

Post a Comment