Wednesday, September 13, 2017

ஐபோன் 8 வெளியீட்டு விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..

அப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வோட்ச் 3, டி.வி 4 கே உள்ளிட்ட தயாரிப்புகள் உலக சந்தையிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை இன்று (அமெரிக்க நேரப்படி) வெளியிட்டது.
இதையடுத்து அப்பிள் நிறுவனம் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:
* டுவல் கெமரா(8 பிளஸ்)
* 8 அடுக்கு பிராசஸர்
* தண்ணீர் மற்றும் தூசுக்கான பாதுகாப்பு வசதி
* 4.7 இன்ஞ் தொடு திரை(ஐபோன் 8); 5.5 இன்ஞ் தொடு திரை(ஐபோன் 8 பிளஸ்)
* வயர்லெஸ் சார்ஜர்
* 60 பிரேம்களில் 4 கே வீடியோ எடுக்கும் வசதி
* ஐபோன் 7 ஐ விட மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் வசதி
* 240 பிரேம்களில் எச்.டி., வீடியோ எடுக்கும் வசதி
* இதன் விலை இலங்கை மதிப்பில் ரூ.107,460 (ஐபோன் 8); ரூ.122,026 (ஐபோன் 8 பிளஸ்)
ஐபோன் எக்ஸ்:

* பேஸ் ரிகக்னைசன்(பாதுகாப்பு அம்சம்)
* ஓ.எல்.இ.டி., தொடு திரை
* 5.8 இன்ஞ் தொடு திரை(458 பிக்சல் பெர் இன்ச்)
* அனிமேசன் ஆகும் இமோஜிக்கள்
* வயர்லெஸ் சார்ஜர்
* இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் ரூ 152,850
அப்பிள் 4கே டிவி
* 4கே துல்லிய வீடியோ வசதி
* எச்.டி.ஆர்.,10 மற்றும் டால்பி விஷன் வசதிகள்
* ஏ.10 எக்ஸ் பிராசஸர் வசதி
* விளையாட்டு மற்றும் செய்திகளை நேரலையில் காணும் வசதி(தற்போது அமெரிக்காவில் மட்டும்; விரைவில் மேலும் 8 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டம்) 

No comments:

Post a Comment