Monday, June 4, 2018

இந்தியாவிலிருந்து டிங்கி படகில் இலங்கை சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!

 இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தாயகம் திரும்பிய ஏழுபேரை வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு படகோட்டிகளுடன் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களுடன் சிறுவன் ஒருவன் ஆகியோரே கைதானவர்கள்.
இவர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக டிங்கி படகின் ஊடாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகிறது.

Friday, April 20, 2018

இலங்கையில் அதிடியாக அமுலாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று (20) முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்காக 011 2 69 68 90 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறிவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.
எனவே தான் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Sunday, March 18, 2018

தாயின் இறுதிக்கடனுக்காக மகன் சுடுகாடு செல்ல தந்தையும் மகளும் சிறைசாலை செல்லும் போது மனதை நெகிழ வைத்துள்ளது

தாயின் இறுதிக்கடனுக்காக மகன் சுடுகாடு செல்ல தந்தையும் மகளும் சிறைசாலை செல்லும் போது  மனதை  நெகிழ வைத்துள்ளது 

மனைவியின் இறுதி நிகழ்வில் மூன்று மணித்தியாலயங்கள் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி!




கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.


இவரின் இறுதி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் மீண்டும் பொலீஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தை சிறைச்சாலை வா கனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றமை அனைவரினதும் மனதையும் நெகிழ வைத்துள்ளது..

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என 2 பிள்ளைகள்.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துமுள்ளனர்.




Sunday, February 25, 2018

அம்பலமானது சொத்து மதிப்பு: கருணா எத்தனையாவது இடம் தெரியுமா?

இலங்கையின் அரசியல்வாதிகளில் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று தகவினை வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும்,
இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகம் என கூறப்படுகிறது.
இந்த தகவலானது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம்.
அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள் விபரம்;
முதலாமிடம் – மகிந்த ராஜபக்ச (18 பில்லியன் டொலர்)
இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதுங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
நான்காமிடம் – ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
ஐந்தாமிடம் – கருணா (17 லட்சம் டொலர்)
ஆறாமிடம் – ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
ஏழாமிடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
எட்டாம் இடம் – ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
ஒன்பதாம் இடம் – ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)
பத்தாம் இடம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)

Monday, February 12, 2018

தே.மு. தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு: 8 குண்டுகள் மீட்பு!!!

 மட்டக்களப்பு புதிய காத்தான்குடி 6இல் அமைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 3.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்சிக் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மேலும் வெடிக்காத 8 நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகரசைபைக்காகப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் காரியாலயத்தில் சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, February 6, 2018

தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரியை நாடு கடத்துமாறு வலுக்கும் கோரிக்கை

 புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 வது சுதந்திரத் தினத்த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசின் தமிழனப் படுகொலைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக சீருடையில் நின்றிருந்த உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விவகார இணைப்பதிகாரி தனது வலது கையின் விரலை கழுத்திற்கு குறுக்கே பல தடவைகள் அசைத்து கழுத்தை வெட்டுவதாக சமிக்ஞை செய்துள்ளார்.
இந்த செயலானது தம்மை அச்சுறுத்துவதாக உள்ளது எனக் கூறி சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக சீருடையில் நின்றிருந்த பாதுகாப்பு விவகார இணைப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து இவ்வாறு நடந்துகொண்ட விதம் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு தமிழருக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜொன்ஸ்டனுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
பிரித்தானியாவின் விருந்தாளியாக உத்தியோகபூர்வ கடமையொன்றில் ஈடுபட்டுள்ள ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ முடியாதது.
அது மாத்திரமன்றி இது அச்சுறுத்தும் செயற்பாடு என்று பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் உறுப்பினர்களான ஜோஹான் ரயான்மற்றும் ஷிவோன் மெக்டொனால்ட் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கர பெரேராவின் தூதரக அதிகாரிக்கான அந்தஸ்த்தை இரத்துச் செய்து அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.


Saturday, January 27, 2018

பிரபாகரன் பிடிபடவும் இல்லை! மரணிக்கவும் இல்லை! இங்கு தான் இருக்கிறார்..! இலங்கை இராணுவ தளபதியின் புது தகவலால் பரபரப்பு ..!

பிரபாகரன் பிடிபடவில்லை இராணுவத் தளபதி புதுத் தகவல். சிங்கள இராணுவத் தளபதியின் புதுத் தகவல்..! இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது.
 150 உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன். ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன். எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன். அவர்கள் உடனடியாகவே அது ”பிரபாகரன் இல்லை என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன்.
 அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன். வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள். புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.
 அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன். வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள். புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.
 ”சார், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது” என உடனடியாகவே அவருக்கு. சில நொடிகள் அமைதியாக இருந்த அவர் “ #பிரபாகரன்_எங்கே?” எனக்கேட்டார்.” சேர், பிரபாகர்ன், பொட்டு அம்மான்,சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது” என பதிலளித்தேன். ”பிரபாகரன்_இறக்கவில்லை என்றால் #போரும்_முடிந்து_விடவில்லை” என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக்கூறினார். அவர் சரியாகத்தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன்.
 புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை. அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் எமக்கு அமைதி ஏற்படபோவதில்லை. “ சார் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம். போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டதது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர்.
 தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர். மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள். ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேள்வியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது. பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது.
 பிரபாகரன்_எங்கே?
 எனினும் எனது உறக்கம் “#பிரபாகரன்_எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது. பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும்.ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும். இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன. இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்..!
 தலைவர் நேற்றுத் தான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்
“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற மந்திர வார்த்தையை வைத்துத்தான் தொழிலை நடத்துகிறார்கள். தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?
பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…
முள்ளி வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சில தென்கிழக்காசிய நாடுகளிலும் சிலருக்கு அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது.
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, இரவோடு இரவாக மில்லியனர்கள் ஆனவர்களும் உள்ளார்கள்.இப்படியொரு சந்தர்ப்பம் (விடுதலைப் புலிகளின் அழிவு) ஏற்படும் என 2009-ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஊகித்து, புலிகளின் சொத்துக்களையும் பணத்தையும் தமது கன்ட்ரேலுக்குள் கொண்டுவந்தவர்களும் உள்ளார்கள்.
அதற்காக ஏப்ரல் மாதத்தில் இருந்து தினமும் காலையில் எழும்போது, “முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” என ஆவலுடன் செய்தி பார்த்தவர்களும் உள்ளார்கள்.மே மாத தொடக்கத்தில் பிரபாகரனும், வேறு சிலரும் தப்பித்துப் போக ஒரு திட்டம் போடப்பட்டு, அதற்கு சுமார் 1 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில், புலிகளின் வெளிநாட்டுப் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து, 18-ம் தேதி அந்தப் பணத்துக்கு தாமே உரிமையாளர் ஆனவர்களும் உள்ளார்கள்.
 அந்த நேரத்தில் அவர்களிடம், 1 மில்லியன் என்ன, அதைவிட பலமடங்கு தொகை இருந்தது! அது அவர்களது சொந்தப் பணமல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பணம்.எப்படியோ, அவர்களில் பலர் எதிர்பார்த்தது போல, வன்னியில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதியுடன் முடிந்தது. அதன் பின் வெளிநாடுகளில் தொடங்கியது, சிறப்பு யுத்தம் – பணத்துக்காக வெளிநாட்டுப் புலிகள் புரிந்த குருஷேத்திர யுத்தம்!
 இதில் ஜெயித்தவர்கள் இருக்கிறார்கள். இருந்த பணத்தை இழந்தவர்கள் இருக்கிறார்கள். தப்பியோடியவர்கள், பிரிந்து போனவர்கள், புதிய கோஷ்டி தொடங்கியவர்கள் என்று தொடங்கி, மார்க்கெட் போன தென்னிந்திய நடிகைக்கு பிறந்தநாள் பரிசாக ப்ம்வ் கார் வாங்கிக் கொடுத்தவர்கூட இருக்கிறார்.மிகவும் சுவாரசியமான யுத்தம் அது. ஆளையாள் ஏமாற்றிய சாதுர்யம்…அதுவரை ஒன்றாக இருந்தவரையே வெளிநாட்டு உளவுத்துறையிடம் போட்டுக் கொடுத்து விட்டு, தாம் தப்பித்துக் கொண்ட கெட்டித்தனம்..
பணத்தை பறிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், டஜன் கணக்கில் கொடுக்கப்பட்ட துரோகிப் பட்டங்கள்…இறந்து போனவர்களில் இமெயில்களை ‘உடைத்த’ திறமை…நேற்று ஏமாற்றி அடித்த சொத்தை இன்று வந்தவர் அடித்துக்கொண்டு போன கில்லாடித்தனம்…
இன்று வெளிநாட்டில் உள்ள சிலருக்கு, விடுதலைப் புலிகளின் யுத்தம் தோல்வியில் முடியவில்லை… அமோக வெற்றி!
பணம் பிரிக்கும் பிரச்னையில் இவர்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், இன்றைய தேதிவரை இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, ‘பிரபாகரன்’ என்ற பெயரை நம்புவதுதான்!காரணம், அந்த ‘பெயர்’தான், இவர்களின் மில்லியன்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது!
“தலைவர் வரட்டும், ஒரு டாலர் குறையாமல் கணக்கு முடித்து விடுகிறேன்”

“அடுத்த யுத்தத்துக்கு தேவை என்பதால் பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தலைவர் நேற்றுதான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்”
மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாம், சர்வ சாதாரணமாக சிலரது வாய்களில் இருந்து வெளியாகும்!
கேட்பவருக்கும் இது கப்சா என்று தெரியும். சொல்பவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் சீரியசாக சொல்வார்.ஆனால் என்ன செய்வது? இருவருமே, “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற மந்திர வார்த்தையை வைத்துத்தான் தொழிலை நடத்துகிறார்கள்.

Tuesday, January 23, 2018

அமெரிக்கா கடலோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று (23) 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட அமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4.31 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3 மணி) பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி முழுவதற்கும் சுனாமி கண்காணிப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Monday, January 22, 2018

வடமராட்சிக்கு பெருமை சேர்த்து தந்த மகான்...


வடமராட்சிக்கு பெருமை சேர்த்து தந்த மகான்களில் ஒருவர்.
தற்காப்புக்கலையில் இவர் 7ஆவது கறுப்புப்பட்டியை பெற்றுத்தந்துள்ளார் இரத்தினசோதி ஐயா.
இவரின் சாதனை வாழ்க்கை மென்மேலும் வளர்ந்து நம்மக்களுக்கு பெருமை சேர்த்துத்தர இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துவோம்






Saturday, January 20, 2018

ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் பிரதேச சபை வேட்பாளர் கைது!-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தொகுதி ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி அல்லாரை கிராம பிரதேசபை வேட்பாளரான கந்தையா சிவாஜி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் காணப்பட்ட போக்குவரத்து வழக்கொன்றில் விதிக்கப்பட்டிருந்த பிடியானையினை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, January 17, 2018

ஜனவரி 17: எம்.ஜி.ஆர்.பிறந்த தினம்!

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இன்றைய திகதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார்.
அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.
நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறைக்கு சென்று, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இருந்த இவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார்.
இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 16, 2018

இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்த வேண்டும்: புலம்பெயர் தமிழர்கள்!!

இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதிப்பிள்ளை தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து ஹறோ கிழக்கு ஆளும் கட்சி நா.உ பொப் பிளக்மனைச் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது பிரித்தானியா தெடரந்து இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து காவல்துறை இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டமை தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.
மேலும் சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதை முகாம்கள் போன்றவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆயுத விற்பனை குறித்து நா.உ கருத்துத் தெரிவிக்கையில்,
வர்த்தக செயலரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை எடுத்து செல்வதாகவும், பிரி.பாராளுமன்றில் Early Day Motion ஒன்று நடைபெறும் போது தான் அதில் பங்கு கொள்வதாகவும் கூறினார்.
அதிரடிப்படைப் படை பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில்;
இப்பயிற்சியானது முறைப்படி கண்காணிக்கப்படுகிறதா என தாம் ஆராய்வதாகவும் கூறினார்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டு அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் தான் இலங்கை சென்றிருந்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நிலைப்பாடு குறித்து தனிப்பட்ட சந்திப்பொன்றை தாமும் பிரதமரும் விரும்பியதாகவும் அரச அதிகாரிகள் உடன் இருந்தமையால் த.தே.கூ.வுடனான சந்திப்பு சாத்தியமாகவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து எமது செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவித்த தமிழர் தகவல் நடுவத்தின் பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா;
இதுவரை இலங்கைக்கான ஆயுத விற்பனையை தடை செய்வது தொடர்பில் பத்திற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தம் குழு சந்திப்புகளை மேற்கொண்டோம்.
மேற்படி சந்திப்புகள் யாவும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Sunday, January 14, 2018

புலிகளின் பாடல் ஒலிபரப்பிய விவகாரம்: அங்கஜனை திட்டினாரா மைத்திரி??

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக விழாவில் புலிகளின் எழுச்சிப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இந்நிலையில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியமைக்காக மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை அலைபேசியில் அழைத்துத் திட்டியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து அங்கஜன் இராமநாதன் கூறியதாவது;
இந்த செய்தியில் ஒருவித உண்மையும் இல்லை. சமூக வலைதளங்களில் வெளியான இந்த செய்தியைப் பார்த்து சிரித்தேன்.
என்னைப் பொறுத்தவரை எமது நிகழ்வில் நாம் ஒலிபரப்பிய பாடல் தமிழர் எழுச்சிக்கான பாட்டு.
இதை எவ்வித உள்நோக்கத்துடனும் பார்க்கத்தேவையில்லை என்று தெரிவித்தார்

Thursday, January 11, 2018

கிளிநொச்சி வைத்தியசாலை முன் பிறந்த குழந்தை போட்டுவிட்டு தாய் தலைமறைவு

 கிளிநொச்சி வைத்தியசாலை முன் பிறந்த குழந்தை போட்டுவிட்டு தாய் தலைமறைவு

நேற்று (10.01.2018) காலை கிளிநொச்சிபொது வைத்தியசாலையின் முன்பாக இருக்கும் பஸ் தரிப்புநிலையத்தில் தான்பெற்ற குழந்தையை அனாதரவாக விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார் .

பயணிகள் குழந்தை இருப்பதனைக்கண்டு வைத்தியசாலை பொலிசாருக்கு தகவல் கொடுத்து குழந்தையை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

Tuesday, January 9, 2018

நீர்வேலி விபத்து: சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழப்பு!-

நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் நீர் வேலியில் ஆட்டோவுடன் கயஸ் வான்மோதியதில் கற்கோவளத்தை சேர்ந்த ஆட்டோவின் சாரதியான சிங்காரவேலுபாஸ்கரன் 55 வயது அதில் பயனித்த டன்சிகா (6வயது) என்ற சிறுமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
சிறுமியின் பேரனும் பேத்தியும் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இச் சம்பவம் நடைபெற்று ஒருவாரத்தின் பின் சிறுமியின் பேரனான ஜே.த.துரைசிங்கம் (66வயது) சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவியான லத்சலா 55 வயது கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1000 ஆண்டுகளாக சிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம்: எங்கிருந்து வருகிறது நீர்..??

 நந்தியின் வாயிலிருந்து வழிந்து வரும் நீர், கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகமாக அமைகிறதாம்.
இந்த அதிசயம் கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில் நிகழ்கிறது.
மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில், நந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நந்தி சிலை அமைப்பில் அதிசயம் எதுவுமில்லை. ஆனால், நந்தி சிவபெருமானுக்கு எதிர்ப்புறமாக இல்லாமல் நேர் மேலே இருக்கிறது.
அதைவிடவும் அதிசயம் என்னவெனில் அந்த நந்தியின் வாயிலிருந்து வழிந்து வரும் நீர், கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகமாக அமைகிறது.
அதிசயம் என்னவெனில் நந்தியின் வாயிலிருந்து எப்போதுமே நீர் ஊற்றாக பெருகி வழிந்து வருவதுதான்.
அதுவும் ஒருநாள், இரண்டு நாள் அல்ல. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல.. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நந்தி வாய் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
சிவபெருமானுக்கு அபிஷேகமாக மாறிய பிறகு அந்த நீர் எதிரில் உள்ள கோவில் தீர்த்தக்குளத்தில் கலந்து விடுவதுபோல செய்யப்பட்டுள்ளது.
நந்தியின் வாயில் இருந்து பெருகிவரும் ஊற்று நீர் எப்போதும் சிவலிங்கத்தின் மீது படும்படி மிகவும் சரியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை யாராலும் அறிய இயலவில்லை.
மேலும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என நம்பப்படுகிறது.

Monday, January 8, 2018

யாழிலிருந்து சிதம்பரம் ஆலயத்திற்கு கப்பலில் செல்லலாம்!!

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்வதற்கு கப்பல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்தாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு சிதம்பரம் ஆலய திருவாதிரை உற்சவம் நடைபெறவுள்ளதால் இம் முறை அந்த உற்சவத்திற்கு வடக்கிலிருந்து இந்துக்கள் செலவதற்கு கப்பல் ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்து கலாச்சார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கமைய குறித்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புகின்றவர்களுக்கான பதிவுகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பதிவுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆகவே மேற்படி செல்ல விரும்புகின்றவர்கள் அதற்கு முன்தாக ஆளுநர் அலுவலகத்தில் பதீவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய காங்கேசன் துறையில் இருந்த இந்தக் கப்பல் சேவைகளும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 2, 2018

மிளகாய் பொடியை தூவிவிட்டு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

 நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.


 இன்று காலை 08.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் லொறியை மறித்துள்ளார்.
பின்னர் மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

 இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதாகவில்லை என தெரியவருகிறது.
மிளகாய்ப்பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, January 1, 2018

01-01-2018 இன்றைய ராசிபலன்கள்

01-01-2018 திங்கட்கிழமை ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ம் நாள்  பெளர்ணமி.
சதுர்த்தசி திதி காலை மணி 11.26 வரை, பிறகு மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை மணி 3.05 வரை, பிறகு திருவாதிரை நட்சத்திரம். யோகம்: அமிர்த சித்த யோகம்.
நல்ல நேரம் 6.30 – 7.30, 4.30 – 5.30
எமகண்டம் காலை மணி 7.30 – 9.00
இராகு காலம் காலை மணி 7.30 – 9.00
குளிகை: 1.30 – 4.00
மேஷம்:
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும்.
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
ரிஷபம்
அதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு.
பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
அதிகாலை 3.12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
கடகம்
பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகமான நாள்.
சிம்மம்:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கன்னி
கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
துலாம்
அதிகாலை 3.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யோகா, தியானம் என
மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்
அதிகாலை 3.12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்.
வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.
தனுசு
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தரு வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.
புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதி காரி சில சூட்சுமங்களை சொல்லித் தரு வார். சிறப்பான நாள்.