வெள்ளைக்காரி காவடி எடுக்கிறா
வெள்ளைக்காரி சேலை கட்டுறா
வெள்ளைக்காரன் தமிழ் பேசுறார்
வெள்ளைக்காரன் வண்டில்ல போறார்
இப்படியான செய்திகளை பார்க்கும் பொழுதோ அல்லது FB post ஐ பார்க்கும் பொழுதோ தோன்றுவதெல்லாம் , இவை ஒரு கீழ்மை மனப்பாங்கின் அறிகுறிகள் என்பது தான்.
ஏனெனில் ஒரு ருசியனோ, பிரென்ச் காரனோ ஒரு ஆங்கிலேயன் தங்கள் மொழி பேசுவதாக புளுகிக் கொள்வதில்லை.
நாமும் ஒரு கறுப்பினத்தவர் தமிழ் பேசுவதாகவோ , தமிழ் ஆடை அணிந்த தாகவோ புளுகிக் கொள்வதில்லை.
எம்மை அறியாமலே இன்னும் ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியின் எச்சங்கள் இன்னும் ஆழ பதிந்துள்ளன. அவற்றின் விளைவில் ஒன்றே இதுவும்.
வெள்ளைக்காரன் செய்தால் தான் எங்கள் மொழி , கலாச்சாரத்துக்கு பெருமை என எண்ணும் நிலைமை நமக்கு தேவையா ?
எகிப்து , கிரேக்கம் போன்ற பண்டைய நாகரீகங்களுக்கு ஈடான மிகவும் பழைமை வாய்ந்த, இப்பொழுதும் நிலைத்திருக்கும் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம். இதை இந்த கீழ்மை மனப்பாங்கு அழித்துவிடும்.
நாசாவில் , சிலிக்கன் வலியிலும் தமிழர்கள் வேலை செய்வது பெருமை அல்ல , அப்படி ஒன்றை எம்மால் உருவாக்க முடியவில்லையே என்பது இழிமை. எமக்கொன்றொரு நாட்டை கூட உருவாக்க முடியவில்லை. தேவையற்ற விடயங்களுக்கு பெருமை கொள்கிறோம்.
நன்றி புருசோத்தமன் தமிழ்ஸன்
No comments:
Post a Comment