ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது துறைமுக ஒப்பந்தமானது இந்திய இலங்கை ஒப்பந்தம் போன்றதொரு காட்டிக்கொடுப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையானது இலங்கை இந்திய ஒப்பந்தம்போன்று காட்டிக்கொடுப்பாகும் என மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். அப்படியாயின் அவர் நாட்டில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை ரத்துச்செய்திருக்கலாம். அவர் ஏன் செய்யவில்லை. அத்துடன் அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும்போது இதனை ரத்துச்செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை.
9 மாகாண சபைகளில் 7மாகாணங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முதலமைச்சர்களே இருக்கின்றனர். 88ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாகாணசபையில் போட்டியிடாவிட்டாலும் அதன் பின்னர் போட்டியிட்டது. 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அதிகாரம் இருந்தும் அவர் அதனைசெய்யாமல் இன்று நாங்கள் காட்டிக்கொடுத்ததாக தெரிவிக்கின்றார்.
அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடும்போது 13ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அப்போது 13க்கு அப்பால் சென்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சர் லோக் சபையில் தெரிவித்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன் பரவலாக பேசப்பட்டு வந்தது. அப்போது அவரின் ஊடகப்பிரிவு ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அவ்வாறு தெரிவிக்
கவில்லை என அறிக்கை வெளியிட்டது. இதனால் இந்திய இலங்கை நாடுகளுக்கிடையிலான நல்லுறவுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை ரத்துச்செய்வதற்கு அதிகா ரம் இருந்தும் அதனை செய்யாமல் தற்போது அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்று காட் டிக்கொடுப்பு என தெரிவிப்பதில் நியாயம் இல்லை என்றார்.
No comments:
Post a Comment