Thursday, August 3, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் அரசுக்கு நஷ்டம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் அரசாங்கத்துக்கு 46000 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
மேலும் ஒருவருடத்திற்கு 9100 மில்லியன் ரூபா செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்த்தில் வறிய குடும்பங்களின் வீடமைப்பு திட்டத்திற்காக 600 குடும்பங்களுக்கு 1 இலட்சம் ரூபாவும், 256 குடும்பங்களுக்கு உபகரங்களும் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்துக்கொண்டார்.
இதுதொடர்பில் அமைச்சர் தலதா அத்துகோரல கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை போல நாட்டின் நலனை பற்றி சிந்திக்காது தமது குடும்ப நலனை மட்டும் சிந்திக்கவில்லை. இன்று நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
உமா ஒயா திட்டம் மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் 535 அமெரிக்க டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டளவில் அதன் 62 சதவீதமான பணிகள் நிறைவுப்பெற்றிருந்தது. ஆனால் பதுளை, பண்டாரவளை மக்கள் இன்றைய அரசாங்கத்தில் தான் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் அரசாங்கத்துக்கு 46000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒருவருடத்திற்கு 9100 மில்லியன் ரூபாய் செலுத்தப்படுகின்றது.
காலிமுகத்திடலில் அமைக்கப்படும் கோப் சிட்டிக்கு 535 ஹெக்டயரும் 2ஹெக்டயர் ஹெங்கிலா சின்கர கம்பனிகளுக்கும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எழுதிகொடுக்ககப்டும் போது யாரும் ஆர்பாட்டங்களையோ, கருத்துகளையோ தெரிவிக்கவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடரவில்லை.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே பிரதமர் சீகா அரசாங்கத்துடன் பேசி மறுபடியும் அவற்றை பெற்றுக்கொண்டது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment