Monday, August 14, 2017

செஞ்சோலை படுகொலை: யாழில் அஞ்சலி!

விமானக்குண்டு வீச்சின் மூலம் செஞ்சோலைச் மாணவர்கள் 54 பேர் படுகொலை செய்யப்பட்ட 11வது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் மதியம் 1.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் பொது ஈகைச்சுடரினை ஏற்றி மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர், மாணவர்கள் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியும் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முல்லைதீவு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளட்டதில் 54 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் பணியாளர்கள் என பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment