யாழ். பல்கலைக் கழக சட்டத்துறை மாணவர்களின் நூல் வெளியீட்டின்போது சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்தவர் உள் நுழைவது தொடர்பில் எம்மிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என துணைவேந்தர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டிற்கு வருகைதந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வருகைதந்திருந்தார்.
அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளும் கைலாசபதி கலையரங்கின் உள்ளேயும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பல்கலைக் கழக வளாகம் மற்றும் நிகழ்வு மண்டபங்களின் உள்ளே விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் ஆகியோர் ஆயுதங்களுடன் நின்றமை தொடர்பில் துணைவேந்தரிடம் தொடர்பு கொண்டு கேண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் துணைவேந்தர் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ். பல்கலைக் கழக சட்டத்துறை மாணவர்களின் நூல் வெளியீட்டின்போது சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்தவர் உள் நுழைவது தொடர்பில் எம்மிடம் முன் அனுமதி பெறப்படவில்லை.
அதாவது நிகழ்விற்கு நீதிபதிகளை அழைத்திருந்தோம் இருப்பினும் அவர்களின் பாதுகாப்பிற்கு பொலிசாரே உள்ளே வருவர் என்றே எண்ணியிருந்தோம்.
இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் வருவதாக முன்கூட்டியோ அல்லது அந்த சந்தர்ப்பத்திலோ எமற்குத் தெரியப்படுத்தவில்லை.
வந்தவுடன் உள் நுழைந்தனர். இவ்வாறு உள் வந்த அதிரடிப்படையினர் நிகழ்வு முடிவுறும் வரையில் உள்ளே நின்று சென்றனர் என்றார்.
No comments:
Post a Comment