Thursday, September 14, 2017

ஊடகவியலாளரின் வீட்டைப் பதம்பார்த்த கொள்ளையர்கள் (படங்கள்)

 பிரபல ஊடகவியலாளர் இரத்தினம் தயாபரனின் வீட்டில் 33 தங்கப்பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
நேற்று மதியம் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.
உடுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மிகவும் திட்டமிட்ட முறையில் இடம்பெற்ற இத்திருட்டு தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரும் அவரது மனைவியும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அலுவலகங்களுக்குச் சென்றிருந்தனர்.
 இந்நிலையில் ஆட்கள் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய நபர்கள் வீட்டில் யன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளைத் திருடிச் சென்றனர். மேலும் ஒரு தொகுதி பணமும் திருடப்பட்டுள்ளது.
 ஆசிரியையான அவரது மனைவி பாடசாலை முடிவடைந்து பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றபோதே திருட்டு இடம்பெற்ற விடயம் தெரியவந்தது.

இது தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நேரில் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தடயவியல் குழுவினரும் அங்கு சென்று தடயங்களைப் பதிவு செய்தனர். இத்திருட்டு தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment