Thursday, September 14, 2017

வயிற்றில் மறைத்து தங்க நகைகளைக் கடத்திய பெண்கள்!

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வயிற்றில் மறைத்து வைத்து சுமார் 4 கோடி ரூபாய் பெறும­தி­யான தங்க நகை­களை இலங்­கைக்கு கடத்­தி­வந்த பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்ட­தாக சுங்க திணைக்களத்தின் ஊடாக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சுங்கதிணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 41 வயது மற்றும் 49 வயதான­ கொழும்பைச் சேர்ந்­த­வர்­க­ளென விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
ஒருவர் இலங்­கையின் பிர­பல காணி விற்­பனை நிறு­வ­ன­மொன்றின் உரிமை­யாளர் என தெரிவிக்கப்படுகிறது.
துபா­யி­லி­ருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்­த­மான யூ.எல். 226 விமா­னத்­தி­னூ­டாக இவர்கள் கட்­டு­நா­யக்க, பண்­டா­நாயக்க விமான நிலையத்தை வந்­த­டைந்­துள்­ளனர்.
குறித்த இரு­வ­ரையும் சுங்கதிணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினர் சோத­னைக்கு உட்­ப­டுத்­திய போது இரு­வரும் அணிந்­தி­ருந்த ஆடை­க­ளுக்கு உட்­பு­ற­மாக பெரி­ய­ள­வான இடைப்­பட்­டி­ யொன்றை கட்டி அதில் தங்க ஆப­ர­ணங்­களை 8 பைக்கற்­று­களில் வகைப்படுத்தி ­மறைத்து வைத்திருந்தமையை அவதானித்தனர்.
இந்த தங்க ஆப­ர­ணங்­களின் மொத்­த­ நிறை 7 கிலோ­ 700 கிராம் என சுங்கத்தினர் தெரிவித்­துள்­ளனர்.
இது தொடர்பில் விமான நிலைய சுங்கப்பணிப்பாளர் ருவன் குமாரவின் உத்தரவுக்கமைய, பிரதி சுங்கப் பணிப்பாளர் கே. எச். ஜி. குமாரசிறியினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment