உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தின் சுரங்கத்திலிருந்து வெளியாகும் விஷம் நிறைந்த திரவ நீரினால் நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை இலங்கை மனித உரிமை கேந்திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உமா ஓயா அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் போதும் அத்திட்டத்திற்கு எதிராக மக்கள் மத்தியிலும் சிவில் அமைப்புகளிடத்திலும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளன.
உமா ஓயா சுரங்க நீர் விநியோக திட்டத்தின் ஊடாக பண்டாரவளை உள்ளிட்ட பதுளை மாவட்ட எல்லைகளில் உள்ள வீடுகளில் வெடிப்பும் கிணறுகளில் நீர் வற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்க மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டு அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டது.
அது மாத்திரமின்றி, குறித்த உப குழுவினால் உமா ஓயா திட்டத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் உமா ஓயா திட்டத்தின் சுரங்க பாதையின் ஊடாக கதரகொல்லவிலிருந்து மொனராகலை பகுதிகளுக்கு விஷமிக்க திரவ நீர் வெளியாகி வருகின்றது.
இந்தத் திரவ நீர் வெளியேற்றத்துடன் மேலதிக போத்தல் துண்டுகள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் இரசானய திரவ பதார்த்தங்கள் வெளியாகி வருகின்றன.
No comments:
Post a Comment