இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன்கலந்துகொள்வதாக இருந்த பாடல் நிகழ்ச்சி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் உன்னிகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது அமைச்சராக இருந்த ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, அவருக்குப் பொன்னாடை போர்த்தினார். அதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தரப்பிலிருந்து கடுமையாக எதிர்ப்பு வந்தது. அதையடுத்து டக்ளசிடம் பொன்னாடை பெற்றுக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்பதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதற்கு டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இந்தியத் தூதரகமும் வட இலங்கை மாகாணசபையின் பண்பாட்டுத் துறையும் அழைத்ததன் பேரில் தான் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் உன்னிகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டது அவருடைய பிழைப்புக்கானது என்றும் கடுமையான வார்த்தைகளில் பதில் கூறியிருந்தார், டக்ளஸ்.
அதையடுத்து, நேற்று யாழ்ப்பாணத்தில், வெலிங்டன் தியேட்டர் பகுதியில், உன்னிகிருஷ்ணனும் அவரின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணனும் கலந்துகொள்ளும் ‘இன்னிசை பாடிவரும்’ எனும் நிகழ்வுக்கு ஏற்பாடு நடந்துவந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னையை மனதில்வைத்து, டக்ளசின் ஈ.பி.டி.பி. கட்சியினர், உன்னிகிருஷ்ணனுக்கு அதீதவார்த்தைகளால் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். யாழ் மக்கள் என்ற பெயரில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடகர் உன்னிகிருஷ்ணனின் நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்தனர்
No comments:
Post a Comment