இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப வேண்டுமாயின் அவர்களுக்கு வசதியாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment