முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது மகன்மார்களான நாமல், யோசித ஆகியோரின் பெயரில் நாடு முழுவதும் 21 காணிகள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரெிவித்தார்.
இதுதொடர்பில் சரியான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பொதுகூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அவர்களினால் வாங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களின் இலக்கங்கள், வாங்கப்பட்ட திகதி, பணம் கொடுத்தமை தொடர்பான சரியான தகவல்கள் தம்மிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே இவ்வாறு விசாலமான காணிகளை வாங்குவதற்கு மஹிந்த குடும்பத்தினருக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment