இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
முட்புதருக்குள் பெண் குழந்தை ஒன்று பழந்துணியால் சுற்றப்பட்டு கிடந்த நிலையில் அப்பகுதியில் சென்ற வழிப்போக்கர் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தையை மீட்டுள்ளார்.
முட்புதருக்குள் குழந்தை இருந்ததால், குழந்தையின் உடம்பில் முட்கள் கீறி ரத்தம் வழிந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த குழந்தையை அதன் பெற்றோர் இறக்க வேண்டும் என்றே கைவிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குழந்தையை மீட்ட அந்த நபர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த அவசர சிகிச்சைப்பிரிவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment