நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுறுஓயா, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி கிடைக்கும். அச்சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தின் சில இடங்களில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும். நாட்டின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யலாம். திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு தொடர்ச்சியான மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நிலவி வரும் வரட்சியான சூழல் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இடியுடன் கூடிய மழை பொழியும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படுக்ககூடும். இந்நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் செயற்படுமாறும், மேகமூட்டத்துடனான வானிலை காணப்படும் சந்தர்ப்பங்களில் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டல திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment