Saturday, August 19, 2017

உலகின் மோசமான நகரம் இதுதானாம்!

உலகில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அல்லது மோசமான நகரமாக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
100 க்கு 30.2 புள்ளிகள் டமஸ்கசுக்கு கிடைத்துள்ளன.
The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களில் சில விடயங்களை முன்மாதிரியாக வைத்து தரப்படுத்தியிருந்தது.
மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில், டமஸ்கஸ் நகரம் இறுதி இடத்தைப்பிடித்துள்ளது.
இது தவிர நைஜீரியாவின் லாகோஸ், லிபியாவின் திரிப்போலி, பங்களாதேஷின் டாக்கா, பப்புவா நியூகினியின் போர்ட் மோஸ்பி ஆகிய நகரங்களும் இத்தரப்படுத்தலில் கடைசி 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment