Saturday, August 19, 2017

வாழத் தகுதியான நகரங்கள்: பட்டியலில் முதலிடம் பிடித்தது எந்த நாடு தெரியுமா?

உலக அளவில் வாழத் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நகரங்களைப் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்தான், உலக அளவில் வாழ்வதற்கு உகந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் வங்காள தேசத்தின் தாகா ஆகிய நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் தகுதியற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது.
எக்கனாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யூனிட் உலக அளவில் 140 நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் எந்தெந்த நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் தகுதியானவை மற்றும் எந்தெந்த நகரங்கள் வாழத் தகுதியற்றவை என்ற ஆய்வை செய்துள்ளது. ஒரு நகரத்தில் இருக்கும் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற காரணிகளை வைத்து இந்த ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தாகா 136-வது இடத்திலும் கராச்சி 134-வது இடத்திலும் இருக்கின்றன. அதேபோல,ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் முதலிடத்தைப் பிடித்து, வாழ மிகவும் தகுதியான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதேபோல இந்தப் பட்டியலின் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவும் கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன. 

No comments:

Post a Comment