கடந்த சில நாள்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பனாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அகமதாபாத், பதான், பனாஸ்கந்தா ஆகிய இடங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குஜராத் மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. இந்த நிலையில், குஜராத் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 218 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த மாவட்டத்தில் மட்டும் 61 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், 4.5 லட்சம் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் மீட்கப்பட்டுவருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களை, மீட்புப் படையினர் உயிரோடு மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment