புகையிரத என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 5 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சீன என்ஜின் பொருத்தப்பட்ட புகையிரதங்கள் மற்றும் எஸ்.10 என்ற இலக்கத்துக்குரிய என்ஜின் பொருத்தப்பட்ட புகை யிரதங்கள் உள்ளடங்கலாக சகல புகையிரதங்களையும் செலுத்தும் சேவைகளிலிருந்தும் விலகி நிற்பதாக மேற்படி சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
மேற்படி சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வழமையான ரயில் போக்குவரத்து சுற்றுக்கள் 120 க்கும் அதிகமாக இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத திணைக்களத்திற்கு புதியவர்களை இணைத்துக்கொள்வதில் உள்ள சிக்கல்களை களைதல், போலியான காரணங்களின் பேரில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள புகையிரத சேவையாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட 5 காரணங்களை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரயில் என்ஜின் ஓட் டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது புதியவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளை நிறுத்துவதாக கூறியிருந்தாலும் இன்று வரையில் அந்தச் செயற்பாடு நிறுத்தப் படவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
No comments:
Post a Comment