Tuesday, August 1, 2017

யாழ். குடாநாட்டில் மணல் விநியோகத்தில் சிக்கல் நிலை!

வடக்கில் மணல் விநியோகத்துடன் தொடர்புடைய திணைக்களங்களின் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் வட மாகாணத்தில் இல்லாதமையே பாரிய பிரச்சனையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மணல் விநியோகத்தில் உள்ள தடங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கின் 5 மாவட்டத்திலும் இடம்பெறும் கட்டுமானப் பணிகளில் அதற்கான மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை எதிர் கொள்வதால் அதனைப் போக்குவது தொடர்பில் முதலில் யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் ஓர் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தற்போது யாழ். குடாநாட்டில் நிலவும் மணல் விநியோகத்தில் உள்ள தட்டுப்பாட்டினைப் போக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு குறித்த மணல் விநியோகத்தை சீராக மேற்கொள்வது தொடர்பாகவும் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் கொள்ளையை கட்டுப்படுத்துவது தொடர்பிலுமே கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சருடன் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோரும் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் விசேடமாக ஆராயந்தனர்.
மேலதி அரசாங்க அதிபர் காணி, பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிசாருடன், கனியவளத் திணைக்கள அதிகாரிகள், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.
வடக்கில் உள்ள வளங்களை வடக்கில் பயன்படுத்துவதற்கு தெற்கில் உள்ள திணைக்களங்களில் அனுமதி பெறுவதில் பல நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படுகின்றது.
இதனால் இத் திணைக்களங்கள் தமது அலுவலகங்களை வடக்கில் நிறுவ வேண்டும். அல்லது அதற்கு முழுப் பொறுப்பு வாய்ந்த அதிகாரி வடக்கில் இருக்க வேண்டும்.
குறிப்பாக கனியவளத் திணைக்களம், புவிச்சரிதவியல் திணைக்களங்களின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அநுராதபுரத்தில் உள்ளனர்.
இதனால் இவர்கள் அந்த மாகாண அதிகாரிகளின் சொல்லின் கீழ் இயங்குகும் நிலமையே கானப்படுவதோடு இவர்களிற்கு இப்பிரதேச நிலமையும் முழுமையாக தெரிவதில்லை.
வடக்கில் மணல் தட்டுப்பாட்டினை வைத்து பலரும் பல விலைகளில் விற்பனை செய்து அநாவசிய பிரச்சணைகள் எழுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

No comments:

Post a Comment