நாட்டில் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் மிக விரைவாகவும் தெளிவாகவும் உங்களுக்கு தருவதற்காக தயாரிக்கப்பட்டது.
Tuesday, August 1, 2017
மாணவர்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் ! 'டெங்கு' வை கட்டுப்படுத்த தீவிரம்
போலீஸாருக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது போல அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்புக் கஷாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு காய்ச்சலை, 'டெங்கு' காய்ச்சல்தான் என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு தமிழக சுகாதாரத்துறை வந்துள்ளது. 'சுகாதாரத்துறை தமிழகத்தில் சீரழிந்துகிடக்கிறது' என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சுட்டிக்காட்டும் போதெல்லாம், "வீண் வதந்தி பரப்ப வேண்டாம், அவதூறு வழக்குப் பாயும்" என்று எச்சரிப்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் கடைபிடித்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்'டெங்கு' பாதிப்பால் மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களுக்கு வந்திருப்பது 'டெங்கு' காய்ச்சல்தான் என்பதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்ட கேரள அரசு, அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைகளை வேகமாகவே தொடங்கிவிட்டது.தமிழகத்தில் 'டெங்கு' காய்ச்சல் இல்லை என்று திரும்பத் திரும்ப அரசு சொல்லி வந்த வேளையில், சென்னையில் 4 போலீஸாரும், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் 'டெங்கு' காய்ச்சலுக்கான சிகிச்சைபெற்றுவருகிறார்கள். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவில் மட்டுமே ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்படத் தொடங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment