Sunday, July 30, 2017

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு  : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது

அம்பாந்தோட்டை மாகம்புர  துறைமுகத்தின்  15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு  குத்தகைக்கு வழங்கும்  இருநாட்டு  துறைமுக ஒப்பந்தம் நேற்று(29.07.2017)
காலை கைச்சாத்திடப்பட்டது. 

அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. 
நேற்று காலை  10. 43 மணிக்கு  இலங்கையின் துறைமுக அதிகார சபையின்  தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர்  துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 
தென் இலங்கையின் பிரதானமான துறைமுகமான ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2011  ஆண்டில் இருந்து அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்க சீன அரசாங்கத்திடம் 193 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  இலங்கை அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கடன் நெருக்கடிகள் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  99 ஆண்டுகால குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் இதில்  85 வீத பங்கு உரிமை சீனாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் என்ற உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள புதிய  உடன்படிக்கையின் பிரகாரம் 70 வீத இலாபம் சீனாவிற்கும் 30 வீத இலாபம் இலங்கைக்கும் என  உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment