Sunday, July 30, 2017

எங்களின் வரலாறு பருத்தித்துறை தெருமூடி மடம்

¶^^^^ எங்களின் வரலாறு ^^^^¶
:பருத்தித்துறை தெருமூடி மடம்:


தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை உணர்த்தும் தெருமூடி மடங்கள்...............…!!

வடமராட்சியின் பிரதான நகரங்களில் ஒன்றான பருத்தித்துறையின் பிரதான வீதியில்இருந்து கிழக்குப் புறமாக தும்பளை வீதியில்  சிவன் கோயிலுக்கு முன்புறமாக இன்று எஞ்சி இருக்கும் பழைய தெருமூடி மடம் எமது பாரம்பரியமான மரபைக் காட்டிக்
கொண்டிருக்கின்றது.இதை போன்ற அமைப்பு கண்டி அரசர் காலத்தில் அம்பலம என்ற இடத்திலும் காணப்பட்டன.இதில், இடப்புறமாகவும், வலது புறமாகவும் உள்ள இருபக்கங்களிலும் தரையில் இருந்து 2 அடி உயர்த்த ப்பட்டு,
40 அடி நீளத்திற்குத் திண்ணையாக்கப்பட்டு
20 அடி உயரமான கூரை அமைக்கப்பட்டுள்ளது.பிரதான வீதிக்கு குறுக்காக இருபக்கங்களையும் மூடி கூரை அமைக்கப்பட்டுள்ளது.நீண்ட தூரம் பயணம் செய்து வருபவர்கள் அதில் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதற்கு ஏற்ற வகையில்,160 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டிருந்தது
பருத்தித்துறையில் அமைக்கபட்ட தெருமூடி மடங்கள் போன்று, மந்திகை, மாலிசந்தி ஆகிய பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருந்த போதும்,இவை அழிவடைந்த நிலையில் பருத்தித்துறையில்உள்ள தெருமூடி மடம் மட்டுமே இன்றும் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.முற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால்,பொது மக்கள் கால்நடையாகவே நெடுந்தூரம் நடந்து சென்று தமத தேவைகளை நிறைவு செய்து கொள்வார்கள் . பருத்தித்துறைக்கென உள்ள தனித்துவமான பண்பாட்டுச்  சின்னமாகக் காணப்படும் தெருமூடிமடம் போன்று தற்பொழுது வேறு எங்கும் இல்லை. ஆயினும் யாழ்ப்பாணத்தில் பண்டாரமடம்
உப்பு மடம், முத்தட்டு மடம், மருதனார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், வல்வெட்டித்துறை வழுக்கல் மடம், நாவலர் மடம், செட்டியார் மடம் பருத்தித்துறை சுப்பர் மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம்,சங்கத்தானை மடம், பனைமுனை மடம்,நெல்லியடி மடம், ஆகிய இடங்களில் இத்தகைய தங்கு மடங்கள் இருந்தபோதும் அவற்றுள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு விட்டன..ஆனால் பருத்தித்துறை தெருமூடி மடம் போன்ற  வீதியை மூடி இரு மருங்கிலுமாக உள்ள மடங்களும் இருந்துள்ளதற்குச் சான்றாக இன்று இது ஒன்றுதான் விளங்குகின்றது. இத் தெருமூடி மடம் 160 வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், இதன் கட்டடக் கலையானது,திராவிடக் கட்டடப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடமானது, வெண்வைரச் சுண்ணக் கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்களைக் கொண்டதுடன் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.இங்கு காணப்படும் 16 தூண்களில்,ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இத்தெரு மூடி மடத்தின் கூரையானது எவ்வகையிலும் பிரதான போக்குவரத்துக்குத் தடையாக அமையாமல் உருவாக்கப்பட்டுள்ளமை இதன் இன்னொரு சிறப்பாகும்.

 ஏற்கனவே வடமராட்சியில் மேலும் மந்திகை வல்லை றோட் போன்ற இடங்களில் தெரு மூடி மடங்கள் இருந்தபோதும் அவை அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவற்றையாவது நாம் ஒரு அமைப்பு ரீதியாகச் செயற்பட்டுப் பேணிப் பாதுகாக்க முன்வர வேண்டும்.அதேவேளை வடமாகாணச் சுற்றுலாத் துறை அமைச்சு இதனை மரபுரிமை பேணும் இடமாகப் பிரகடனப்படுத்திப் பேணிவரவேண்டும்.

ஆயினும் பருத்தித்துறை வாழ் மக்கள்  நமது பாரம்பரியப் பெருமைகளைப் பேணிவரும் மரபுரிமைச் சொத்துக்களை அழியவிடாது இன்றும் பாதுகாத்து வருவதையிட்டு தமிழுலகம் நன்றியுடன் நினைவு கூருகின்றது.

No comments:

Post a Comment