இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்காவும் கோரியது. இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என சீனாவலியுறுத்தியது. ஆனால், இந்தியா படைகளை திரும்பப் பெறவில்லை.
இந்நிலையில், சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சீனாவில் மாபெரும் அணிவகுப்பு நடந்தது. இதில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சீனா மீது, உலகின் எந்த நாடு போர் தொடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சீன ராணுவத்தால் எந்த எதிரிகளையும் வீழ்த்த முடியும்" என்றார்
No comments:
Post a Comment