உலக வங்கியின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட சிற்அங்காடி முதல்வரினால் திறந்து வைக்கப்பட்டது.
நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் யாழ் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட 76 கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய சிறிய சந்தை தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் , யாழ் வணிகர் சங்கத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment