அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு சைட்டம் எதிர்ப்பு மக்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச வளங்களை தனியார்மயப்படுத்துவது, சைட்டம் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்காமை, எட்கா உடன்படிக்கை, காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டம், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment