யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் மேற்கொண்டவர் அவரைக் கொலை செய்வதற்காகவே வந்தார் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படை பிரிவின் ஏற்பாட்டில் சாதாரண தர பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவத்தினர் யுத்தத்திற்கு சென்று எமது தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களை பாதுகாப்பதற்குத் தான், இராணுவத்தினரின் இரத்தம் சிந்தப்பட்டது. இப்போது, சாந்தியும் சமாதானமும் வந்திருக்கின்றது.
இந்த காலத்தில் இராணுவத்தினர் என்ன செய்ய வேண்டும். தேசத்தின் அபிவிருத்திக்காக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ இராணுவ அதிகாரிகள் வேலை செய்கின்றார்கள்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்தம் இல்லாமல் இருக்கின்றது. அங்கு இராணுவத்தினர் தான் இரத்தம் கொடுக்கின்றார்கள். முன்னைய காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை.
இராணுவம் மக்களின் சுகாதாரத்திற்கு இரத்தம் வழங்குகின்றார்கள். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கின்றார்கள்.
அத்துடன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் உயிரை சிங்கள பொலிஸார் தனது உயிரைக் கொடுத்து காப்பாற்றியுள்ளார்.
இன, மத மொழி பேதமின்றி அந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்றுவதும், சிங்கள இராணுவமும், சிங்கள பொலிஸாரும், அங்குதமிழ் இராணுவம் இல்லை. தமிழ் பொலிஸாரும் இல்லை.
இவ்வாறான சம்பவங்கள் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே செய்யப்படுகின்றன.
தென்னிலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்றார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.
நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், மா.இளஞ்செழியன் உயிரிழந்த பொலிஸாரின் மனைவியைப் பார்த்து கும்பிடுகிறார். பொலிஸாரின் பிள்ளைகளை தத்தெடுப்பதாக சொல்லியிருக்கின்றார்.
அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அதனை பார்த்த தென்னிலங்கை மக்கள் இப்படி ஒரு தமிழ் மக்கள் இருக்கின்றார்களா என கேட்கின்றார்கள்.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை சுட வந்தவர் அவரைக் கொலை செய்யவே வந்தான். அவரைக் காப்பாற்றவே சிங்கள பொலிஸார் தன்னுடைய உயிரைக்கொடுத்தார்.
அங்கு இன, மத மொழி, எதுவும் இல்லாமல் இருந்தது. அவ்வாறு தான் கல்வி கற்பிக்கும் போதும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனாலேயே இந்த நாட்டிற்கு சிறந்த காலம் வரும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து படித்தவர்கள் தான் இலங்கையில் தலைவர்கள் போன்று செயற்பட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment