பாராளுமன்ற நடவடிக்கைகள் வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை நிலையை அடுத்தே பாராளுமன்றம் பிற்போடப்பட்டுள்ளது.
பெற்றோல் விநியோகத்தை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
குழப்ப நிலை காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகளை வழமைபோன்று நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதனால் பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
பெற்றொலிய துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த 25ம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோக சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.
No comments:
Post a Comment