Saturday, July 29, 2017

விராட் கோஹ்லி பதவி விலக வேண்டும்..!!

விராட் கோஹ்லியை பதவி விலக பி.சி.சி.ஐ வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பன்னாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ( ONGC) நிறுவனத்தின் முகாமையாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வலியுறுத்தியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் பதவியிலிருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவிறுத்தியுள்ளது.
இந்நிலையில் விராட் கோஹ்லி மாத்திரமன்றி அணியின் சக வீரர்களான ரஹானே, புஜாரா, இசாந் ஷர்மா, ரோஹித் ஷர்மா உட்பட 100 இந்திய வீரர்கள் தமது பதவிளை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.

No comments:

Post a Comment