Saturday, July 29, 2017

அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்ட ஒப்பந்தம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று கைச்சாத்து

நீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட உள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் யூ ஷியான்லிங் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க , அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம , நிதி அமைச்சர் மங்கள சமரவீர , விஷேட திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமைத்தாங்க உள்ளனர். 

அத்துடன் சீனா மேர்சன்ட் நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி ஹ{ ஜியான்யூ உள்ளிட்ட இருதரப்பு அதிகாரிகளும் கலந்துக் கொள்ளவுள்ளனர். ஒப்பந்த்தின் ஆரம்ப வரைபு திருத்தப்பட்ட நிலையிலேயே புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. இதனடிப்படையில் , அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எந்தவொரு இராணுவ செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தடை விதிக்கும் வகையிலேயே சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் அமையப்பெறவுள்ளது. 
அம்பாந்தோட்டை துறைமுக சொத்துக்களையோ, அல்லது சுற்றியுள்ள பிரதேசத்திலோ இலங்கையின் இறையாண்மைக்கு  உட்பட்ட  தரை , வான் , கடல் , கரையோரம்  அல்லது ஆழ்கடலில் எந்தவொரு இராணுவ இயல்புடைய செயற்பாடுகளையும் சீனா மேற்கொள்ள உள்ளது.  இதே வேளை துறைமுகமல்லாத மற்றும் கடல்சாராத வர்த்தக செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருடன் தொடர்புடைய செயற்பாடுகள்,  அல்லது எந்த வகையான, இராணுவ சூழலுடன் தொடர்புடைய செயற்பாடுகளையும் இங்கு மேற்கொள்ள முடியாது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு மாத்திரமே உரிமை உள்ளது.
சீனாவின் போர்க்கப்பல்களையோ, நீர்மூழ்கிகளையோ கொண்டு வருவதற்கோ , நிறுத்தி வைப்பதற்கோ , இராணுவ கருவிகள் மற்றும் இயந்திரங்கயை களஞ்சியப்படுத்துவதற்கோ , தொலைத் தொடர்பு வலையமைப்புகளை நிறுவுவதற்கும் தேவையான அனுமதிகளை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு மாத்திரம் உள்ளது. சீன நிறுவனத்துடன் இன்று சனிக்கிழமை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்தப் புதிய ஒப்பந்தத்திற்கு அமைவாக அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் 69.55 வீத பங்குகள் சீன நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளன. 30.45 வீதமான பங்குகள் இலங்கையிடம் இருக்கும். இதற்காக இரண்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும். 606 மில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்படும்  அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக சேவைகள் நிறுவனத்தில் 50.7 வீத பங்குகளின் உரிமையை இலங்கை துறைமுக அதிகார சபை கொண்டிருக்கும். எஞ்சிய 49.3 வீத பங்குகள் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
794 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமத்தில் 85 வீத பங்குகளை சீன நிறுவனமும் , 15 வீத பங்குகளை இலங்கையும் கொண்டிருக்கும். 99 ஆண்டுகளின் பின்னர், சீன நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளும். தலா 1 டொலருக்கு  துறைமுக அதிகாரசபைக்கு மாற்றப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment