முகமாலை வடக்குப் பகுதியில் இன்று (29.07.2016) காலை 10.00 மணியளவில் அளவில் இனம் தெரியாத நபர்களினால் 20 ஏக்கர் காணி தீக்கிரையாகி உள்ளது.
இன்று இலங்கை மின்சார சபையால் முகமாலை வடக்குப் பகுதிக்கான மின் வினியோக வேலைகள் A9 வீதியுடாக இடபெற்றுக் கொண்டிருந்த வேளை இனம் காணப்படாதவர்களால் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இருப்பினும் இவ்வான சம்பவத்தைக் கண்ட இளைஞர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இன்று மாலை 02.30 மணியளவில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளர்.
இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி மின் பொறியியலாளர் தலைமையில் மின் வினியோக திருத்தவேலைப் பணிகள் நடை பெறுகின்றது.
No comments:
Post a Comment