பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சராக இருந்த ஷாகித் கஹான் அப்பாஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃபை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. இதனால், யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து, இன்று நவாஸ் ஷெரீஃப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்துவருகிறார். பாகிஸ்தான் நாட்டின் சட்டப்படி, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாவதற்கு முன்னதாக, பிரதமராகப் பதிவியேற்க முடியாது. எனவே, அந்தக் கட்சியைச் சேர்ந்த பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஷாகித் கஹான் அப்பாஸி, இடைக்காலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், 45 நாள்களுக்கு பிரதமராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment