Saturday, July 29, 2017

வடக்கு மக்களின் உற்பத்திகள் வெளிநாட்டில் சந்தைப்படுத்தும் முயற்சி வெற்றியளிக்குமா?


வடமாகாண மக்களின் உற்பத்திகள் வெளிநாட்டில் சந்தைப்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரோக்டியிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜேர்மனிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் ரோக்டி மற்றும் அவரது குழுவினருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சந்திப்பு இடம்பெற்றது.
முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சிகள் மிக திறமையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாக சுட்டிக்காட்டினார்.
வடமாகாணத்தில் தனியார்துறை முதலீடுகளுக்கு போதியளவு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனியார்துறையில் முதலீடுகள் தொடர்பில் ஆராய்ச்சி அறிக்கைகளை தரமுடியும் என நான் தெரிவித்ததற்கு, வடமாகாண மக்களின் உற்பத்திகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
விமானத்தளத்தினையும், துறைமுகத்தினையும் புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அவற்றின் ஊடாக எமது பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியுமென எண்ணுகின்றேன்.
ஜேர்மன் நாட்டிற்கும் வடமாகாணத்திற்கும் இடையில் எவ்வாறு பொருளாதார மேம்பாட்டினை மேற்படுத்த முடிமென்பது தொடர்பில் விரிவாக பேசப்பட்டன.
அத்துடன், வடமாகாண மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துச் சென்றுள்ளார் என்றார்.

No comments:

Post a Comment