வித்தியா கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் மூன்றாவது கட்ட சாட்சியப் பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்றைய நாள், இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் அளிக்கப்படும்.
கொலையுண்ட மாணவி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான மரபணுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த, மரபணுத் தடயவியல் நிறுவனத்தின் தலைவர் சாட்சியத்தை அளிக்கவுள்ளார்.
இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக மரபணு ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த வழக்கின் ஆரம்பத்தில் கூறியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment