ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.
ஈரான் நாடு சில தினங்களுக்கு முன்பு ராக்கெட் ஏவுகணை சோதனையை நடாத்தியது.
ஈரானின் இந்த சோதனை நடவடிக்கையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை முயற்சி என்று அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும் இந்த சோதனையில் ஈரான் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை முயற்சி நடத்தியதாக ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment