Saturday, July 29, 2017

நீங்காத நினைவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கலாம் நினைவு மண்டபம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக ராமநாதபுரம் பேய்கரும்பு பகுதியில் மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நினைவு மண்டபத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்!
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ. 15 கோடி செலவில் நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த பர்னிகா கமெர்ஷியல் எஸ்டேட் என்ற நிறுவனம் கட்டுமானப் பணியை மேற்கொண்டது. தினமும் 500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 2.1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 1500 சதுர மீட்டர் அளவில் நினைவு மண்டபம் உருவாகியுள்ளது. நுழைவு வாயில்' இந்தியா கேட்' போலவும் கோபுரம் ராஷ்ட்ரபதி பவன் மாதிரியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வெளிப்புறப் பகுதி 150 மில்லி மீட்டர் தடிமன் கிரானைட் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தில் வடக்குப் பகுதியில் கலாமின் கல்லறை உள்ளது. 

No comments:

Post a Comment